பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ஞாயிற்றுக்கிழமை காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
67 வயதான ரிஷி கபூர், தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் டெல்லி சென்றிருந்த நிலையில், அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த அவர், காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறேன். பயப்படும் அளவுக்கு ஏதுமில்லை எனத் தெரிவித்தார்.
இதனிடையே மருத்துவமனையில் உள்ள ரிஷி கபூரைப் பார்க்க அவரது மகனும் நடிகருமான ரன்பீர் கபூர், தனது தோழி அலியாபட்டுடன் டெல்லி சென்றார்.