அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் ஷூஜித் சர்கார் இயக்கத்தில் இந்தியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குலாபோ சீதாபோ. ஏப்ரல் 17ஆம் தேதி தியேட்டரில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட திரைப்படம், கரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் நேற்று வெளியானது.
அழகான உணர்வைக் கொடுக்கும் 'குலாபோ சீதாபோ' : டாப்சியின் ட்வீட் - அமேசான் பிரைம்
அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் குலாபோ சீதாபோ திரைப்படத்தை நடிகை டாப்சி பாராட்டியுள்ளார்.
gulabo-sitabo-taapsee-finds-big-b-adorable-asks-ayushmann-is-that-lisp-for-real
குலாபோ சீதாபோ திரைப்படத்தை நடிகை டாப்சி பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''மிகவும் தேர்ந்த நடிகர்களுடன் ரசிக்கும்படியான கதாப்பாத்திரங்களோடு ஒரு பயணம் செல்வது படம் நம்மை அழைத்துச் செல்கிறது. படம் முடியும் போது நமக்குள் ஒரு அழகான உணர்வைக் கொடுக்கிறது'' என பாராட்டியுள்ளார்.
ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவந்தாலும், அமிதாப் மற்றும் ஆயுஷ்மான் குர்ரானாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.