பாலிவுட்டில் நடிகர் தேர்வு இயக்குநராகவும் உடற்பயிற்சி வல்லுநராகவும் இருக்கும் சயீது என்பவர் கங்கனா மீதும் அவரது சகோதரி ரங்கோலி மீதும் பிரிவினைவாதம், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் ஒன்றை நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கங்கனா மீதும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேல் மீதும் வழக்குப்பதிவு செய்ய மாநில காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து தன்னையும் தனது சகோதரியையும் மும்பை காவல் துறையினர் சிறையிலடைக்க முயற்சித்துவருவதாக புதிய குற்றச்சாட்டை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "நான் சாவர்க்கர், நேதாஜி, ஜான்சிராணி போன்றவர்களை வணங்குகிறேன். இன்று அரசு என்னை சிறையில் அடைக்க முயற்சிக்கிறது. இதனால் எனது தேர்வுகள் குறித்தான நம்பிக்கையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
'சாவர்க்கர் போல என்னையும் சிறையில் அடைக்க முயற்சி' - கங்கனா - கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
மும்பை: சாவர்க்கர் கிளர்ச்சிக்காகச் சிறையில் அடைக்கப்பட்டதைப் போலவே, என்னையும் சிறைக்கு அனுப்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என கங்கனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராணி லட்சுமி பாயின் கோட்டை தகர்க்கப்பட்டது. அதேபோல் என் வீடும் இடிக்கப்பட்டது. சாவர்க்கர் கிளர்ச்சிக்காகச் சிறையில் அடைக்கப்பட்டதைப் போலவே, என்னையும் சிறைக்கு அனுப்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.
சகிப்புத்தன்மையற்ற கும்பலிலிருந்து அவர்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் எனச் சொன்ன அவர், இந்த நாடு சகிப்புத்தன்மையற்ற நாடா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். அத்தோடு ஆமீர்கானின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்திருந்தார்.