டெல்லி: 'லஷ்மி பாம்' படத்துக்காக பாலைவனத்தில் வாட்டி வதைக்கும் வெயிலில் வெறும் காலில் நடனமாடியுள்ளார், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.
இதுகுறித்து கியாரா அத்வானி கூறியிருப்பதாவது:' 'லஷ்மி பாம்' படத்தில் இடம்பெறும் புர்ஜ் கலிஃபா பாடலின் படப்பிடிப்பு மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக அமைந்திருந்தது. ஆடம்பரமான ஆடையணிந்து மிகவும் ஆடம்பரமான இடத்தில் வைத்து படமாக்கப்பட்டது.
பனிப்பொழிவின்போது சிஃப்பான் சேலைகளை அணிவது கடினமாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அதை விட கொளுத்தும் வெயில், வாட்டி வதைக்கும் விதமாக வெப்பம் இருக்க வெறும் காலில் நடனமாடுவது என்பது மிகவும் கடினமானது. கமர்ஷியல் படங்களில் நடித்துள்ள அனைத்து நடிகைகளும் நான் மேற்கூறிய விஷயங்களில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக செய்திருப்பார்கள்' என்றார்.