தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உடலை ஃபிட்டாக வைக்க நட்சத்திர அண்ணன் - தங்கையின் யோகா பயிற்சி - யோக பயிற்சி செய்யும் சாரா அலிகான்

வழக்கமான வேலைகளுக்கு மத்தியில் யோகா செய்வதை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்த நடிகை சாரா அலிகான், அவரது சகோதரர் இப்ராஹிம் அலிகான் ஆகியோர் இணைந்து யோகா பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Sara ali khan latest update
Sara ali khan yoga practice

By

Published : Jun 9, 2020, 9:38 AM IST

மும்பை: பொதுமுடக்கத்துக்கு இடையே அண்ணன்-தங்கையான இப்ராகிம் அலிகான் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் ஒன்றாக இணைந்து யோகா செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

கண்ணாடி முன்னிலையில் இவர்கள் இருவரும் யோகா பயிற்சி செய்யும் புகைப்படத்தை இப்ராஹிம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

யோகா செய்வது உடல் நலத்துக்கு நன்மை தரும் என பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவிக்கும் வேளையில், அதே கருத்தை புகைப்படத்தோடு பிரபலங்களான இவர்கள் முன்வைத்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து சாரா நடித்துள்ள புதிய படமான கூலி நம்பர் 1, கடந்த மே மாதம் ரிலீஸாக வேண்டியது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details