தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மசாலா தோசை செய்வது எப்படி; விசித்திரமாக இருக்கிறது - ப்ரீத்தி ஜிந்தாவின் சமையல் ட்வீட் - ப்ரீத்தி ஜிந்தாவின் மசால் தோசை

மசாலா தோசை செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன் என நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

Preity G Zinta
Preity G Zinta

By

Published : Mar 28, 2020, 7:25 AM IST

தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா மசாலா தோசை செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

உலகப் பெருந்தொற்றான கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

படப்பிடிப்பு ஏதும் இல்லாததால் பிரபலங்கள் சமூகவலைதளமே கதி என்று இருக்கின்றனர். சமூகவலைதளத்தில் இல்லாதவர்கள் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி வருகின்றனர். சமூகவலைதளப் பக்கத்தில் இருப்பவர்கள் அன்றாடம் வீட்டில் செய்துவரும் வேலைகளை வீடியோக்காளாக பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ப்ரீத்தி ஜிந்தா மசால் தோசை செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இறுதியாக மசாலா தோசை செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன். நான் 16 நாட்களாக வெளியே செல்லவும் இல்லை. யாரையும் சந்திக்கவும் இல்லை. இது உங்களால் நம்பமுடியாதது. விசித்திரமாக இருக்கிறது. நான் வீட்டில் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறேன். அம்மாவிடம் எனக்கு பிடித்தமான உணவு வகைகளின் செய்முறை குறிப்பை கற்றுக்கொண்டு வருகிறேன். இது ரொம்ப நல்லது. இந்த சூழலில் பாஸிட்டிவாக இருக்க கற்றுக்கொண்டு வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details