ஹைதராபாத்: ரியா சக்ரபோர்தி தனது இன்ஸ்டா பக்கத்தில், தந்தையர் தினமான இன்று தன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தந்தையர் தினத்தன்று மன்னிப்பு கடிதம் எழுதிய ரியா - rhea chakraborty says sorry to father
ரியா போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, ஒரு மாத காலம் மும்பை பைகுல்லா சிறையில் இருந்தார்..
தந்தையின் கையில் தான் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்த அவர், என் தந்தைக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துகள். நீங்கள்தான் என் நம்பிக்கை, என் உத்வேகம். என்னை மன்னித்துவிடுங்கள், காலங்கள் கடினமானதாக இருக்கிறது. ஆனால், உங்கள் குட்டிப் பெண் நான் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். நீங்கள் தைரியமான அப்பா, லவ் யூ அப்பா என குறிப்பிட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சிக்கியதைதான் கடினமான காலங்கள் என ரியா குறிப்பிட்டுள்ளார். இதில் ரியாவின் தந்தையையும் காவலர்கள் விசாரணையில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ரியா போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, ஒரு மாத காலம் மும்பை பைகுல்லா சிறையில் இருந்தார்.