தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதல் டாட்டூவை தந்தைக்கு அர்ப்பணித்த கீர்த்தி குல்ஹாரி - கீர்த்தி குல்ஹரி

மும்பை: பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி, தான் குத்திய முதல் டாட்டூவை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

கீர்த்தி குல்ஹரி
கீர்த்தி குல்ஹரி

By

Published : Jun 21, 2020, 6:51 PM IST

உலக தந்தையர் தினமான இன்று (ஜூன் 21) பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி தனது தந்தையுடன் இருக்கும் கல்லூரி கால புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் குழந்தையாக இருந்தபோது எனது அப்பா என்னையும் எனது மூத்த சகோதரியும் கதக் வகுப்புகளில் சேர்த்தார்.

அவர் எங்களை அவரது ஸ்கூட்டரில் கொண்டு விடுவார். பின்னர் வகுப்பு முடியும்வரை அவர் அங்கேயே எங்களுக்காக காத்திருந்தது. எங்களை வீட்டிற்கு மீண்டும் அழைத்து வருவார். அவரையும் அந்த ஸ்கூட்டர் எதையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அந்த ஸ்கூட்டர் பயணம் ஒருபோதும் என் வாழ்வில் மறக்க முடியாது.

அனைவருடன் மிக அன்பாக பழகும் என் அப்பாவின் குணம்தான் என்னை வாழ்க்கையில் மிகவும் பிடிப்புள்ள தாக்கியது. என் முதல் ஹீரோ எனது தந்தை. இந்த புகைப்படம் நான் கல்லூரியில் சேர்ந்த காலத்தில் எடுக்கப்பட்டது. அப்போது எனக்கு 17 வயது இருக்கலாம். ஒரு நடிகை ஆவேன் என்ற திட்டம் அப்போது எனக்கு இல்லை. நான் குத்திய முதல் டாட்டூவை எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்”.

ABOUT THE AUTHOR

...view details