பாலிவுட்டில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குநராகவும் வலம் வருபவர் ஃபரா கான். 12 வயது நிரம்பிய இவரது மகள் அன்யா, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஓவியம் வரைந்து நிதி திரட்டி வருகிறார்.
இவர் வரையும் ஓவியத்திற்குப் பிரபலங்கள் பலரும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் அபிஷேக் பச்சன் அன்யாவுக்கு, தனது பங்காக ரூ. 1 லட்சத்தை வழங்கியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஃபரா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'யார் ஒரு ஓவியத்திற்கு ஒரு லட்சம் வழங்குவார்கள். அது அபிஷேக் பச்சன் மட்டுமே. இவரின் இந்தச் செயல் அன்யாவின் தொண்டு முயற்சிக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. மிகப்பெரிய நன்றி' என்று அபிஷேக் பச்சனைக் கட்டிபிடித்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றையும் ஃபரா கான் பதிவிட்டுள்ளார்.