தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட நடிகருக்கு கரோனா - போதைப்பொருள் வழக்கில் நடிகர் அஜாஸ் கான்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாலிவுட் நடிகர் அஜாஸ் கானுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நடிகர் அஜாஸ் கான்
நடிகர் அஜாஸ் கான்

By

Published : Apr 5, 2021, 11:49 AM IST

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், போதைப்பொருள் கும்பலுக்கும் பாலிவுட் திரையுலகிற்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக (என்சிபி) அலுவலர்கள் பாலிவுட் பிரபலங்கள் பலரை கைதுசெய்துள்ளனர்.

இதனிடையே, பாலிவுட் நடிகரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கானும் போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அவருடன் விசாரணையில் ஈடுபட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பாலிவுட் நகைச்சுவை நடிகர் பாரதி சிங் கைது!

ABOUT THE AUTHOR

...view details