ஆயுஷ்மான் குரானா, யாமி கௌதம், புமி பெட்நேகர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள படம் 'பாலா’. அமர் கௌசிக் இயக்கியுள்ள இப்படத்தை மேட்டாக் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு சச்சின் - ஜிகார் இசையமைத்திருக்கின்றனர். இதில் Don't be shy பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் தன்னுடைய Don't be shy பாடலின் அப்பட்டமான காபி என படக்குழுவை கடுமையாக சாடியிருக்கிறார், இசையமைப்பாளர் சீயஸ்.
இசை திருட்டு - ஆயுஷ்மான் படக்குழுவை அசிங்கமாக திட்டிய சீயஸ்! - சீயஸ்
'பாலா' படக்குழு தனது இசையை அனுமதியின்றி, பயன்படுத்தியதற்காக சீயஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
சச்சின் - ஜிகார் இசையமைத்ததாக குறிப்பிடப்படும் Don't be shy பாடலை பாலிவுட் ரேப்பர் பாட்ஷா பாடியிருக்கிறார். இதுகுறித்து பாட்ஷா, 'சீயஸ் என்னுடைய சீனியர், அவர் என் மீது கோபம் கொள்ள எல்லா உரிமையும் உண்டு. நான் அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எனது நண்பர்கள் சச்சின் - ஜிகார் Don't be shy பாடலை மீட்டுருவாக்கம், செய்வதாக சொன்னபோது, நான் தேவையான உரிமைகளைப் பெற்றுவிட்டதாக சொன்னார்கள். என்ன தவறு நடந்தது என புரியவில்லை. இதுகுறித்து நான் தெளிவாக விசாரிக்கிறேன். நான் உங்கள் பக்கம் நிற்கிறேன் சீயஸ்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'கருத்துகளை பதிவு செய்' படத்தை வியந்து பாராட்டிய தணிக்கைக் குழு