தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகப்பேறு மருத்துவரான 'டாக்டர் ஜி': ஆயுஷ்மான் குரானா பட ஷூட்டிங் தொடக்கம்!

ஹைதராபாத்: ஆயுஷ்மான் குரானா - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகவுள்ள 'டாக்டர் ஜி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

Doctor G
Doctor G

By

Published : Jul 19, 2021, 3:44 PM IST

இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் சகோதரி அனுபூத்தி காஷ்யப் ஆயுஷ்மான் குரானா - ரகுல் ப்ரீத் சிங்கை வைத்து 'டாக்டர் ஜி' என்னும் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்திற்கு சுமித் சக்சேனா - விஷால் வாக், சவுரப் பாரத் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். ஜுங்காலி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

மருத்துவக் கல்லூரியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஆயுஷ்மான் குரானா டாக்டர் உதய் குப்தா கதாபாத்திரத்திலும், சீனியர் மருத்துவ மாணவி டாக்டர் பாத்திமா கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கவுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 'டாக்டர் ஜி' படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக ஆயுஷ்மான் குரானா தனது சமூகவலைதளப் பக்கத்தில், "'டாக்டர் ஜி' படப்பிடிப்பிற்கு தயாராகவுள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதனுடன், தான் மகப்பேறு மருத்துவம் தொடர்பான புத்தகத்தை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் ஆயுஷ்மான் குரானா பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆணுறை பரிசோதனையாளரான ரகுல் ப்ரீத் சிங் படத்திற்கு குறும்பு தலைப்பு!

ABOUT THE AUTHOR

...view details