இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த நன்கொடை வழங்குமாறு பிரதமர் மோடி சமீபத்தில் பொதுமக்களுக்கு வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையை கடக்க அனைவரும் உதவ வேண்டும் - பிரதமர் நிவராண நிதிக்கு உதவும் பாடகர் - தில்ஜித் டோசன்ஜ் பாடல்கள்
கரோனா தொற்றை தடுக்கும் விதமாக பிரதமரின் தேசிய நிவராண நிதிக்கு ரூ 20 லட்சம் வழங்குவதாக நடிகரும் பஞ்சாப் பாப் பாடகருமான தில்ஜித் டோசன்ஜ் கூறியுள்ளார்.
Diljit Dosanjh
இந்த வேண்டுகோளை ஏற்று சினிமா பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதனையடுத்து பஞ்சாப் பாடகரும் நடிகருமான தில்ஜித் டோசன்ஜ் தனது பங்குக்கு ரூ. 20 லட்சத்தை வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நம் நாட்டிற்கு உதவுவதே நமது முன்னுரிமை. இந்த கடினமான சூழ்நிலையை நாம் கடந்து செல்ல நாம் நாட்டிற்கு உதவவேண்டும். இதில் எனது பங்காக ரூ. 20 லட்சத்தை வழங்குகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.