ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘ராஞ்சனா’ (Raanjhanaa). இது தனுஷின் முதல் பாலிவுட் திரைப்படமாகும், இதை ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டனர்.
'அசுரன்' சிவசாமியுடன் ஜோடி சேரும் பக்ஷிராஜன்...? - அக்ஷய் குமார் தனுஷ்
'ராஞ்சனா' பட இயக்குநருடன் தனுஷ் மீண்டும் ஒரு புதிய பாலிவுட் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இதனையடுத்து, தனுஷ் மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் தனுஷூடன் அக்ஷய் குமார், சாரா அலிகான், ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அக்ஷய் குமார் சம்மதிக்கும்பட்சத்தில் ஆனந்துடான முதல் படமாகும். அதுமட்டுமல்லாது தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் திரையில் ஒன்றாக இணையும் முதல் படமும்கூட. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.