ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘ராஞ்சனா’ (Raanjhanaa). இது தனுஷின் முதல் பாலிவுட் திரைப்படமாகும், இதை ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டனர். தமிழில் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், பாலிவுட்டில் படம் சக்கைப் போடுபோட்டது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆனந்த் எல். ராய் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே ‘அம்பிகாபதி 2’ திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்த ஆண்டுக்குள் எதிர்பார்க்கலாம்.
அம்பிகாபதி 2ஆம் பாகத்தில் சாரா அலி கான்!
தனுஷின் ‘அம்பிகாபதி 2’ படத்தில் கதாநாயகியாக சாரா அலி கான் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Raanjhanaa
‘அம்பிகாபதி 2’ (Raanjhanaa 2) முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், அதிலிருந்த ஒருசில விஷயங்களை மட்டும் கொண்டு உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது, இதில் சோனம் கபூருக்குப் பதிலாக சாரா அலி கான் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தனுஷ் தனது அடுத்தடுத்த திரைப்பட வேலைகளில் பிஸியாக இருப்பதால், அடுத்த ஆண்டுதான் ‘அம்பிகாபதி 2’ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.