நடிகர் தனுஷ், 'ராஞ்சனா' படம் மூலம் 2013ஆம் ஆண்டு பாலிவுட்டில் கால்பதித்தார். இதையடுத்து அமிதாப் பச்சனுடன் இணைந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். அப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்காமல் தோல்வியைத் தழுவியது. இதனால் தனுஷ் பாலிவுட் படங்களுக்கு சிறிய இடைவெளி விட்டிருந்தார்.
இதற்கிடையில் தற்போது மீண்டும் தனுஷ், பாலிவுட்டில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகிவரும் 'அட்ராங்கி ரே' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சாரா அலிகான் கதாநாயகியாக நடிக்க அக்ஷய் குமார் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும், இதன் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.