'தாம் தூம்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் பாலிவுட்டலில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதைகளில் நல்ல வேடம் ஏற்று நடித்து வருகிறார். இவர் நடித்த குயின், மனிகர்ணிகா ஆகிய படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன. ஆனால், நாளொரு வண்ணம் தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் உண்டு.
அண்மையில் இவர் நடித்துள்ள 'ஜட்ஜ்மெண்டல் ஹை கியா' படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவரிடம் மூர்க்கத்தணமாக நடந்துகொண்டார். இது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இது ஓய்வதற்குள் இவர் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் செய்தி அதிரடியாக வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ராஜ்நீஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் 'தாகத்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.