தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அவள் பயமற்றவள், நெருப்பு போன்றவள் - ‘தாகட்’ வெளியீடு குறித்து அறிவித்த கங்கனா - தாகட்

கங்கனாவின் ‘தாகட்’ படப்பிடிப்பு போபால், மத்திய பிரதேசம் பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வருகிற அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் என கங்கனா தெரிவித்துள்ளார்.

Dhaakad gets release date
Dhaakad gets release date

By

Published : Jan 18, 2021, 3:47 PM IST

ஹைதராபாத்: கங்கனா ரனாவத் தனது ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான ‘தாகட்’ வெளியாகும் தேதி குறித்து அறிவித்துள்ளார். இதில் ஏஜென்ட் அக்னி எனும் கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துவருகிறார்.

கங்கனாவின் ‘தாகட்’ படப்பிடிப்பு போபால், மத்திய பிரதேசம் பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வருகிற அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் என கங்கனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், அவள் பயமற்றவள், நெருப்பு போன்றவள்; அவள்தான் ஏஜென்ட் அக்னி என குறிப்பிட்டுள்ளார்.

மணிகர்ணிகா படத்தின் இரண்டாம் பாகத்தில் கங்கனா நடிப்பதாக அறிவித்திருந்தார். தன்னுடைய கதையை கங்கனா திருடிவிட்டதாக எழுத்தாளர் அசிஷ் கவுல் குற்றம்சாட்டினார். இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், தனது அடுத்த படத்தின் வெளியீட்டு தேதியை கங்கனா அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details