குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என நாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் பல்கலைக்கழகம், கல்லூரி மாணவ மாணவியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஒரு பெற்றோராகவும் இந்திய குடிமகனாகவும் கவலை கொள்கிறேன். விரைவில் அமைதி திரும்ப பிரார்த்திக்கிறேன். சிறந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடமிருந்தே பாடங்களை கற்கின்றனர். உலகின் இளைய ஜனநாயகத்திற்கு சல்யூட் என ட்வீட் செய்துள்ளார்.