ஆசிட் வீச்சால் பாதிப்புக்குள்ளான லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகி வருகிறது. இதையடுத்து தனது இரண்டாவது படமாக மகாபாரதம் கதையை தயாரித்து, அதில் மைய கேரக்டரான திரெளபதியாக நடிக்கவுள்ளார்.
திரெளபதியாக அவதாரம் எடுக்கும் தீபிகா! - துரோபதியாக அவதாரம் எடுக்கும் தீபிகா
கிளாமர், ஹோம்லியான கதாபாத்திரங்களில் வெரைட்டி காட்டி வந்த தீபிகா படுகோனே முதல் முறையாக புராணக் கதையில் நடிக்கவுள்ளார். மகாபாரதம் கதையை பல்வேறு பகுதிகளாக திரைப்படமாக உருவாகவுள்ள நிலையில், அதில் திரெளபதியாக தோன்றவுள்ளார்.
நடிகை தீபிகா படுகோனே
இதுகுறித்து தீபிகா கூறியதாவது, ‘திரெளபதி கதாபாத்திரத்தில் நடிப்பதை பெருமையாகக் கருதுகிறேன். இது என் வாழ்வின் சிறந்த கேரக்டராக இருக்கும் என நம்புகிறேன். புராணக் கதையான மகாபாரதத்திலிருந்து வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. முற்றிலும் புதிய பரிணாமத்தில் இந்தக் கதையை உருவாக்கவுள்ளோம். பல பகுதிகளாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் பாகத்தை 2021ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.
Last Updated : Oct 25, 2019, 2:22 PM IST