ஹைதராபாத்: தீபிகான் படுகோன் தயாரித்து நடிக்கவிருந்த மகாபாரதம் கதை தற்போதைக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது.
திரௌபதி பார்வையில் மகாபாரதம் - சரியான நேரத்துக்காக காத்திருக்கும் படக்குழு! - மகாபாரதம்
‘சபாக்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த தீபிகாவுக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 அக்டோபர் மாதம் தான் மகாபாரதம் கதையை தயாரித்து நடிக்கவிருப்பதாக தீபிகா அறிவித்தார். திரௌபதியின் பார்வையில் இந்த புராணக் கதையை எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். பின்னர் கரோனா காரணமாக இது தள்ளிப்போனது. தற்போது சரியான நேரம் பார்த்து இக்கதை படமாக்கப்படும், அதுவரை காத்திருப்போம் என அதன் படக்குழு தெரிவித்துள்ளது.
சரியான இயக்குநர் கிடைக்காத காரணத்தாலேயே தயாரிப்புக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் விஷால் பரத்வாஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘சபாக்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த தீபிகாவுக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.