ஹைதராபாத்: ‘தூம் 4’ படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூம் 4: இது தீபிகா டைம்?
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷாருக்கானுடன் ‘பதான்’ எனும் படத்தில் தீபிகா நடிக்கவுள்ளார். அதேபோல் சகுன் பத்ரா இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.
இந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீக்குவல் ‘தூம்’. இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ளன. தற்போது இதன் நான்காவது பாகம் உருவாகவுள்ளது. ஜான் ஆப்ரஹாம், ரித்திக் ரோஷன், ஆமிர் கான் ஆகியோர் இதுவரை முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘தூம்’ வரிசையில், தீபிகாவை நடிக்க வைக்க யாஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், தீபிகா தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறாராம். இந்த ஆண்டு இறுதிவரை தீபிகாவின் கால்ஷீட் கிடைப்பது சிரமம் என கூறப்படுகிறது.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷாருக்கானுடன் ‘பதான்’ எனும் படத்தில் தீபிகா நடிக்கவுள்ளார். அதேபோல் சகுன் பத்ரா இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். அட்லியின் அடுத்த படத்தில் தீபிகா நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.