ரசிகர்களுக்கு புதிய அப்டேட் கொடுக்கவுள்ள தீபிகா! - தீபிகா படுகோனே அப்டேட்
மும்பை : தீபிகா படுகோன் தனது ரசிகர்களிடம் இன்னும் மூன்று நாட்களில் புதிய சுவாரஸ்யமான அப்டேட் ஒன்றைத் தெரிவிக்க உள்ளார்.

இயக்குநர் ஷாகுன் பாத்ரா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்காக தீபிகா தற்போது கோவாவில் உள்ளார். இந்நிலையில், கோவாவில் இருந்தபடியே தனது சமூக வலைத்தள பக்கத்தில் '3 days to go' எனக்கூறி, தென்னை மரத்தின் புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
தீபிகாவின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர், தீபிகா, ஷாருக்கானுடன் நான்காவது முறையாக அட்லி இயக்கும் திரைப்படத்தில் இணையவிருப்பதைதான் இவ்வாறு சொல்கியிருக்கிறார் எனவும், வேறு சிலர் அவர் கர்ப்பமடைந்திருப்பதை தான் இவ்வாறு கூற வருகிறார் என்றும் யூகித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தீபிகா படுகோன், ’நடிகையர் திலகம்’ திரைப்படப் புகழ் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள அறிவியல் புனைவு (sci-fi) படத்திலும் நடிக்க உள்ளார்.
மேலும், அவர் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்த ‘83’ திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.