பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் இன்று சப்பாக் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆசிட் வீச்சு பாதிப்புக்குள்ளான லக்ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் வரிச்சலுகை அளித்துள்ளன.
இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனே தனது படம் இன்று வெளியானதையொட்டி, புகழ்பெற்ற மும்பை சித்தி விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
பாரம்பரியமான வெள்ளை நிற உடை அணிந்து வந்திருந்த தீபிகா படுகோனே, சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு விநாயகரை தரிசித்தார்.