நீண்ட இடைவெளிக்குப் பின் 'பாலிவுட் பாட்சா' ஷாருக்கான் நடிக்கவுள்ள படம் 'பதான்'. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தை, யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் சல்மான்கான் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், பதான் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் தீபிகா படுகோனே இதுவரை நடிக்கதாகக் கதபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.