ஹைதராபாத்: ‘பிகு’ எனும் ப்ளாக்பஸ்டரை கொடுத்த அமிதாப் - தீபிகா, ‘தி இண்டெர்ன்’ எனும் ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
ராபர்ட் டி நிரோ, அன் ஹாத்வே நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘தி இண்டெர்ன்’. நான்சி மேயர்ஸ் இயக்கிய இப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் அன் ஹாத்வே கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனும், ராபர்ட் டி நிரோ கதாபாத்திரத்தில் ரிஷி கபூரும் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரிஷி கபூர் உயிரிழந்தார்.