தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மனநல விழப்புணர்வுக்காக சர்வதேச விருதைப் பெற்ற தீபிகா - கிறிஸ்டல் விருதை பெற்ற தீபிகா

”எனது வாழ்க்கை பயணத்தில் ஏற்பட்ட மனஅழுத்தத்திலிருந்து விடுபட போதிய விழப்புணர்வு இல்லாததைப் புரிந்துகொண்டு ’லிவ் லவ் லாஃப்’ என்ற பவுன்டேஷன் மூலம் மனநலம் ஆரோக்கியம் குறித்து விழப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கிரிஸ்டல் விருதை வென்ற தீபிகா படுகோன் கூறினார்.

Global award for Deepika
Actress Deepika padukone

By

Published : Jan 22, 2020, 7:21 AM IST

டவோஸ்: மனநல ஆரோக்கியம் குறித்து விழப்புணர்வை ஏற்படுத்தி பங்களிப்பை வழங்கியதற்காக உலக பொருளாதார மன்றத்தில் வைத்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டவோஸ் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்றார் தீபிகா படுகோனே. இதையடுத்து மனநல ஆரோக்கியத்துக்கு அவர் வழங்கிய பங்களிப்புக்காக கிரிஸ்டல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

விருதைப் பெற்ற பின் தனது அனுபவத்தைப் பகிர்ந்த தீபிகா, 'எனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த மன அழுத்தத்திலிருந்து விடுபட போதிய விழப்புணர்வு இல்லாததைப் புரிந்துகொண்டேன். இது குறித்து தெரிந்தால் ஒருவரையாவது மீட்கலாம் என்று தோன்றியது.

இதன் காரணமாக ’லிவ் லவ் லாஃப்’ என்ற பவுன்டேஷனை தொடங்க என்னை ஊக்கப்படுத்தி, மனநலத்தைப் பேணி காப்பது பற்றி பொதுமக்களுக்கு விழப்புணர்வை ஏற்படுத்த செய்தது” என்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த பவுன்டேஷனை இயக்கிவரும் தீபிகா, இதன் மூலம் தேசிய அளவில் மனநலம் குறித்து பல்வேறு வகைகளில் விழப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details