விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ள 'டியர் காம்ரேட்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது.
இந்தியில் ரீமேக்காகும் 'டியர் காம்ரேட்'! - இந்தியில் ரீமேக்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகவுள்ள 'டியர் காம்ரேட்' படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய போவதாகவும், அதன் உரிமையை பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் பெற்றிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெலுங்கில் 'அர்ஜூன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, இப்படத்தில் கிரிக்கெட்டராக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக 'கீதா கோவிந்தம்' நாயகி ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த படத்தை மித்ரி மூவிஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பாரத் கம்மா இயக்கியுள்ளார், இசை ஜஸ்டின் பிரபாகரன்.
இந்நிலையில் பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹர், 'டியர் காம்ரேட்' படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். படத்தின் கதை மிகவும் பிடித்துப்போக, அதன் உரிமையை வாங்கி தனது தர்மா மூவிஸ் மூலம் தயாரிக்கவுள்ளார்.