நீண்ட இடைவெளிக்குப் பிறகு டேவிட் தவான் தனது மகன் வருண் தவானை வைத்து இயக்கியுள்ள படம் ‘கூலி நம்பர் 1’. இது 1995ஆம் ஆண்டு டேவிட் தவான் இயக்கிய படத்தின் ரீமேக் ஆகும். அதில் கோவிந்தா, கரிஷ்மா கபூர் ஆகியோர் நடித்திருந்தனர், படம் மாபெரும் வெற்றி கண்டது.
மகனை வைத்து முத்தக்காட்சி இயக்கியது குறித்து டேவிட் தவான் - டேவிட் தவான்
என் மகனை வைத்து முத்தக்காட்சி இயக்குவதில் எப்போதும் சிரமம் இருந்ததில்லை. தொழில் என்று வரும்போது அதையெல்லாம் பார்க்க முடியாது. ஷூட்டிங்கில் இதை செய்யலாமா வேண்டாமா என்றெல்லாம் வருணிடம் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன். நான் இதை செய் என்றால் செய்ய வேண்டும்.
‘கூலி நம்பர் 1’ படத்தின் ரீமேக்கில் வருண் தவான், சாரா அலி கான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் 25ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்து டேவிட் தவான் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் உங்கள் மகனை வைத்து முத்தக்காட்சியை இயக்குவதில் சிரமம் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், என் மகனை வைத்து முத்தக்காட்சி இயக்குவதில் எப்போதும் சிரமம் இருந்ததில்லை. தொழில் என்று வரும்போது அதையெல்லாம் பார்க்க முடியாது. ஷூட்டிங்கில் இதை செய்யலாமா வேண்டாமா என்றெல்லாம் வருணிடம் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன். நான் இதை செய் என்றால் செய்ய வேண்டும்.
கதைக்கு முத்தக்காட்சி தேவைப்பட்டால் அதில் நடிக்கதான் வேண்டும். ஃப்ரேமில் இருப்பது என் மகன் என்று எண்ணிக் கொண்டிருக்க முடியாது. ஷூட்டிங் நடக்கும் இடத்தில் அவரும் ஒரு நடிகர், அவ்வளவுதான் என தெரிவித்துள்ளார்.