தமிழில் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அறியப்படுபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார்.
பாலிவுட்டில் சல்மான் கான் நடித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘டபாங்’. சிம்பு நடித்திருந்த ‘ஒஸ்தி’ இதன் ரீமேக்தான். ‘டபாங்’ படத்தில் ரஜ்ஜோ எனும் கதாபாத்திரமேற்று சோனாக்ஷி சின்ஹா நடித்திருப்பார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் எடுக்கப்பட்டது. அதுவும் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட, இதன் மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்குகிறார்.