டாக்டே புயல் மிக அதிதீவிர புயலாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தாக்கம் மும்பையின் பல இடங்களில் இருந்தது. குறிப்பாக நேற்று (மே. 16) நள்ளிரவுக்குப் பிறகு பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதுகுறித்து நடிகர் அமிதாப் பச்சன் " டாக்டே புயலின் தாக்கம் தொடங்கியுள்ளது. மும்பையில் மழை. பாதுகாப்பாக இருங்கள். பிரார்த்தியுங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
நடிகைகள் கரீனா கபூர், மலைக்கா அரோரா ஆகியோரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய வானிலை மையம், மும்பை, தானே, பல்கர் போன்ற இடங்களில் மணிக்கு 75-100 கிலோ மிட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க:என்னையும் கைது செய்யுங்கள் - கொதித்தெழுந்த ஓவியா