கரோனா தொற்று காரணாக தேசிய ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமலில் இருக்கிறது. இந்த உத்தராவல் பொதுமக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரமால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
அனைத்து வித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் கரோனா குறித்தும் கரோனாவில் இருந்து தப்பிப்பது குறித்தும் வீடியோக்களை தங்களது சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
இதனையடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய ஊரடங்கை மதித்து வீட்டிற்குள் இருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், 'நாட்டில் இருக்கும் பிரச்னை குறித்து அறிந்திருக்கம் மக்கள் வீட்டில் இருந்ததற்கு நன்றி. உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்' என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ட்வீட்டுடன் படா கபரிஸ்தானின் கல்லறை, வெறிச்சோடியிருக்கும் தெரு ஆகிய புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு தேசிய ஊரடங்கு குறித்தும் நாட்டின் பிரச்னை குறித்தும் சல்லமான் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சமூக விலகல், சுய தனிமைப்படுத்தல் மிகவும் முக்கியமானது. அரசாங்கம் கூறும் விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடியுங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.
இதையும் வாசிங்க: தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய சல்மான் கான்