தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளியிட்டு தேதியை ஒத்திவைத்த இந்தியன் மார்வெல் 'சூரியவன்ஷி' - அக்க்ஷய்குமார் அறிவிப்பு! - சூரியவன்ஷி ட்ரெய்லர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அக்க்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'சூர்யவன்ஷி' திரைப்படத்தின் வெளியிட்டை படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர்.

Sooryavanshi
Sooryavanshi

By

Published : Mar 13, 2020, 8:55 AM IST

நடிகர்கள் அக்க்ஷய்குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் ’சூர்யவன்ஷி’. ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தை தர்மா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரில்லர் காப் ஸ்டோரியாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கார் ரேஸ் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்தியன் மார்வெலாக உருவாகியுள்ள இப்ப படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. ட்ரெய்லரில் இப்படம் மார்ச் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது படக்குழு.

இதனையடுத்து அக்க்ஷய்குமார் தனது சமூகவலைதளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'சூர்யவன்ஷி' எங்களின் ஒரு வருட கடின உழைப்புடன் உங்களுக்காக அர்பணிப்புடன் உருவாக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்தப் படத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

சமீபத்தில் உலகமுழுவதும் பரவி வரும் கொரோனா பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதன் காரணமாக படத்தின் தயாரிப்பாளர்கள் சூரியவன்ஷி படத்தின் வெளியிட்டு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இந்த அறிவிப்பு உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் நாங்கள் உங்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாகவும் இருங்கள். விரைவில் படம் வெளியாகும் தேதியை அறிவிக்கிறோம் என்றார்.

உலக சுகதாரா அமைப்பு (WHO) கொரோனா வைரஸை உலகளாவிய பெருந்தொற்றாக தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: கோவாவில் சொகுசு வில்லா வாங்கிய 'சூரியன்ஷி' அக்‌ஷய் குமார்

ABOUT THE AUTHOR

...view details