பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று (ஏப். 5) கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதனால் அவர், வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி - அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
covid-19-positive-akshay-kumar-hospitalised-as-precautionary-measure
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "உங்கள் அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி. நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் மருத்துவ ஆலோசனையின்படி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நடிகர் அக்ஷய் குமாருக்கு கரோனா!
Last Updated : Apr 5, 2021, 1:13 PM IST