மும்பை: உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளும் யோசனைகளை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் நடிகை கத்ரீனா கைஃப்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, அனைவரும் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி, தியானம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். எனவே இவற்றை தவறாமல் கடைபிடியுங்கள். உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு சந்தாஷமாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன், தனது தோழிகளோடு சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார் கத்ரீனா.