கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் பள்ளிகூடங்கள், மால்கள், கல்லூரிகள் என அனைத்தையும், மத்திய அரசு மார்ச் 31 ஆம் தேதி வரை மூட ஆணையிட்டுள்ளது. இதனையடுத்து விளம்பர படப்பிடிப்பு, தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு என அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக, இந்திய மோஷன் பிக்சர் தயாரிப்பாளர்கள் சங்கம் (Indian Motion Pictures Producers Association) அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மோஷன் பிக்சர் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், "கரோனாவை உலகத்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மார்ச் 19 - மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.