உலகை அச்சுறுத்திவரும் உலக சுகாதார அமைப்பால் பெருந்தொற்று என அறிவிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவிலிருந்து தப்பிக்க அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம் - ஹேம மாலினி - urges Hema Malini
கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசு கூறிய வழிமுறைகளை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகை ஹேம மாலினி வலியுறுத்தியுள்ளார்.
![கொரோனாவிலிருந்து தப்பிக்க அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம் - ஹேம மாலினி Hema Malini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6429181-106-6429181-1584360140954.jpg)
Hema Malini
கொரோனாவிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி அரசும் பிரபலங்களும் விழிப்புணர்வுகளை மக்களிடையே கூறிவருகின்றனர்.
பாலிவுட் நடிகை ஹேம மாலினி தனது சமூகவலைதளப்பக்கமான ட்விட்டரில், "கோவிட்-19 ஆல் இந்தியாவில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கொரோனாவிற்குத் தடுப்பூசி, முறையான சிகிச்சை இன்னும் கண்டறியப்படாத நிலையில், நாம் இப்போது அரசு கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமுடன் பின்பற்றி கொரோனாவை வெல்வோம்" எனக் கூறியுள்ளார்.