பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலியா பாட், சாந்தனு மகேஷ்வரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உருவாகிவரும் படம் ‘கங்குபாய் கத்தியவாடி’.
கங்குபாய் கத்தியவாடி - கரோனா சூழலால் காதல் காட்சிகள் கட்! - ஆலியா பட்
அலியா பாட் நடிப்பில் உருவாகிவரும் ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் கரோனா சூழல் காரணமாக நெருக்கமான காட்சிகளைக் தவிர்க்க அதன் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி முடிவு செய்துள்ளார்.
COVID-19 effect: Love scene from Alia Bhatt
பாலியல் தொழிலாளர்களின் ராணியாக விளங்கிய மும்பை மாபியா குயின் கங்குபாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நாயகனுக்கும் நாயகிக்கும் மிக நெருக்கமான காதல் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா சூழலில் தனிநபர் இடைவெளி என்பது புதிய வழக்கமாக மாறியுள்ளது. எனவே ரொமாண்ட்டிக்கான காட்சிகளை வேறு எந்த வகையில் காட்சிப்படுத்தலாம் என படக்குழு ஆலோசனையில் இறங்கியுள்ளது.