தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தாராவி ராப் பாடகர்கள் உருவாக்கியுள்ள கரோனா விழிப்புணர்வு பாடல்! - ஹிப் ஹாப்

தாராவியை சேர்ந்த ராப் பாடகர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கரோனா விழிப்புணர்வு பாடலுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தாராவி ராப்பர்கள் உருவாக்கி அக்‌ஷய் குமார் நடித்த கரோனா விழிப்புணர்வு பாடல்
தாராவி ராப்பர்கள் உருவாக்கி அக்‌ஷய் குமார் நடித்த கரோனா விழிப்புணர்வு பாடல்

By

Published : May 5, 2020, 8:06 PM IST

கரோனா தொற்றுப் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல் ஒன்றை தாராவியை சேர்ந்த ராப் பாடகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ பாடலில் பிரபல திரையுலக நட்சத்திரங்கள் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி, தியா மிர்சா, அதுல் குல்கர்னி, ராணா டகுபதி ஆகியோர் தோன்றியுள்ளனர்.

இந்த கரோனா விழிப்புணர்வுப் பாடல் இந்தி, மராத்தி, தமிழ் என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஜோயல் டிசோசா என்பவரது இயக்கம், கருத்துகளுடன், எம் சி அல்தாஃப், டோனி சைக்கோ, டோப் அடெலிக்ஸ், போன்ஸ் அண்ட் ரிப்ஸ் ஆகியோர் பாடி உருவாக்கப்பட்டுள்ளது.

அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் வாழும் மக்கள், தங்களுக்குள்ள யதார்த்த சிக்கல்களை மீறி பாதுகாப்பான, ஆரோக்கியமான நடவடிக்கைகளை பின்பற்றக் கோரும் விதத்தில் இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளன.

இந்த கல்லி கேங் ரேப்பர் குழுவை நிறுவிய ரேப்பர் டிவைன், அடர்த்தியான மக்கள்தொகை நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பாடலை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உதவுமாறும், தன்னலமற்ற முறையில் தங்கள் சேவைகளை மக்களுக்கு வழங்கும் காவல்துறை, உள்ளூர் நிர்வாகம், சுகாதார அலுவலர்கள் ஆகியோருக்கு ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:மீண்டும் நம்மை மகிழ்விக்க வருகிறான் ‘ஹெர்குலஸ்’

ABOUT THE AUTHOR

...view details