தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ரா ஜாமீனை மீண்டும் ஒத்திவைத்த நீதிமன்றம் - நடிகை ஷில்பா ஷெட்டி

மும்பை: ஆபாசப் பட விவகாரத்தில் கைதான தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் முன் பிணை வழக்கை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Kundra
Kundra

By

Published : Jul 30, 2021, 4:47 PM IST

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மும்பை காவல் துறையினரால் ஜூலை 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவருடன் ரியான் தோர்பே என்பவரும், மாடல் அழகி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக காவல் துறை தரப்பில் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில், ஆபாச படம் விற்பனை செய்ததற்கான பண பரிமாற்றங்களுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடம் அவரது வீட்டிற்கு சென்று காவல் துறையினர் சோதனையும் விசாரணையும் மேற்கொண்டனர். கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு தொடர்பாக பிணை வேண்டி ராஜ் குந்த்ரா, ரியான் தோர்பே மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் அவர்களுது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், ராஜ் குந்த்ரா மீண்டும் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த முன் ஜாமீன் மீதான விசாரணை இன்று (ஜூலை.30) நடைபெற இருந்த நிலையில், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இதையும் படிங்க: ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ராவிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details