தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமீர்கான் மீது தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம் - சகிப்பின்மை அமீர் கான்

நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக பிரபல நடிகர் அமீர் கான் 2015ஆம் ஆண்டு கூறியதை அடுத்து, அவரது கருத்தை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்
சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்

By

Published : Nov 26, 2020, 4:38 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கடந்த 2015ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது என்றும், தன் மனைவி கிரண் வேறு நாட்டிற்குச் சென்று குடியேறிவிடலாமா என்று தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

சகிப்பின்மை குறித்து அமீர் கானின் பேசிய இந்தப் பேட்டியைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது. இந்நிலையில், அமிர் கான், அவரது மனைவி கிரணின் கருத்துகளுக்கு எதிராக தீபக் திவான் என்பவர் 2015ஆம் ஆண்டு ராய்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு அப்போதே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தீபக் திவான் தொடர்ந்து சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை நேற்று (நவ.25) விசாரித்த நீதிபதி சஞ்சய்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. இது குறித்துப் பேசியுள்ள அமீர் கான் தரப்பு வழக்கறிஞர் டி.கே.க்வாலர் நீதிபதி தர்க்கரீதியான தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :மணாலி: இரவு ஊரடங்குக்கு தயாரான ரவீனா

ABOUT THE AUTHOR

...view details