நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் பாலிவுட் திரைத்துறையையே உலுக்கியது. இது குறித்து திரைத்துறையினர் பலரின் மீது புகார் எழுப்பப்பட்டது. சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக திரைத்துறையினர் பலரை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: கங்கனா ரணாவத்துக்கு சம்மன் - சுஷாந்த் சிங் தற்கொலை
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்காக நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
திரைப்பட விமர்சகர் ராஜீவ் மசந்த், இயக்குநர்-தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி, திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட 39 பேரிடம் இதுவரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், நடிகை கங்கனா ரணாவத்தை விசாரணைக்கு வருமாறு மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
முன்னதாக, பாலிவுட்டில் நிலவிவரும் வாரிசு அரசியல் காரணமாகத் தான், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்றும், இது தொடர்பாக மும்பை காவல்துறையினர் தன்னை விசாரணை செய்யலாம் என்றும், நடிகை கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.