ஹைதராபாத்: சல்மான் கானின் ‘ராதே’ திரைப்படம் ரமலான் அன்று வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரமலான் அன்று வெளியாகிறது சல்மான் கானின் ‘ராதே’ - ராதே
திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் கரோனா வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். ரமலான் அன்று ராதே திரைக்கு வரும், அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளியுங்கள் என சல்மான் குறிப்பிட்டுள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா படானி, ரந்தீப் ஹூடா, ஜாக்கி ஷ்ரோஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ராதே’. கடந்த ஆண்டு ரமலான் (மே 22) அன்று வெளியாகவிருந்த இத்திரைப்படம், கரோனா காரணமாக தள்ளிப்போனது. தற்போது இந்தப் படத்தை வருகிற ரமலான் பண்டிகை அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா சூழலில் என் படத்தை வெளியிடுவது என்பது பெரிய முடிவுதான். திரையரங்க உரிமையாளர்கள் பொருளாதார சிக்கலில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. ராதே படத்தை வெளியிடுவதன் மூலம் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் கரோனா வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். ரமலான் அன்று ராதே திரைக்கு வரும், அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.