சுஷாந்த் சிங்கின் வாழ்க்கையை முன்பே கணிக்கப்பட்ட ஒரு மரணத்தின் கதையாகப் பார்க்கலாம். 1889ஆம் ஆண்டில் வின்சென்ட் வான் கோக் தனது காதை சிதைத்துக்கொண்ட பின் வரைந்த புகழ்பெற்ற 'தி ஸ்டாரி நைட்' (The Starry Night) படத்தை சுஷாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படமாக வைத்திருந்தார்.
அவரது இன்ஸ்டாகிராமின் இறுதிப் பதிவில், 2002ஆம் ஆண்டில் காலமான அவரது அன்புக்குரிய தாயின் படத்துடன், கடந்த காலம், கண்ணீர்த் துளிகளால் முடிவற்ற கனவுகள், பரபரப்பான இந்த வாழ்க்கை, இருவருக்கும் இடையிலான சொல்லாடல் என்று பதிவிட்டிருந்தார்.
அனைவருக்கும் 34 வயதில் தற்கொலை எண்ணம் இருக்காது. ஆனால் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்ட சுஷாந்துக்கு அந்த எண்ணம் இருந்தது. அது மட்டுமல்ல, 2013இல் 'கை போ சே' திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து அவர் நடித்த 11 படங்களில் ஐந்து படங்களில் திரையில் அவர் இறந்துபோவதாகக் காண்பிக்கப்பட்டது.
சேதன் பகத்தின் 'The 3 Mistakes of My Life' கதையை அடிப்படையாகக் கொண்ட 'கை போ சே' படத்தில் கவர்ந்திழுக்கும் இணக்கமான இஷான் கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சூரிய மறைதல் பின்னணியில் நடந்துவருவது அவரது நலம் விரும்பும் நண்பரான அலி ஹாஷ்மி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகையில் மகிழ்ச்சியடையும்போது ஒரு இணக்கமான நடிகனாக காட்டப்பட்டிருப்பார்.
இயக்குநர் அபிஷேக் கபூர், இஷான் கதாபாத்திரத்தின் மரணத்தை ஒரு உணர்வுப்பூர்வமான முடிவாக மாற்றி எடுத்தார். படத்தின் மிகவும் நேசிக்கப்பட்ட கதாபாத்திரத்தின் மரணம் மூலமாக கோத்ரா ரயில் வன்முறையையும், குஜராத் கலவரத்தின் காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டுவது என்பது கபூரின் தனி பாணியை காட்டுகிறது.
தினேஷ் விஜன் இயக்கிய 'ராப்தா' (2017) என்னும் மறுபிறவி குறித்த படத்தில், அவரது கதாபாத்திரங்களில் ஒன்றில் இறந்துவிடுவார். மற்றொரு கதாபாத்திரமான சிவ் கக்கர், நீரில் மூழ்குவதிலிருந்து ஒரு சிறுமியால் காப்பாற்றப்படுவார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013 வெள்ளத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட கேதர்நாத் (2018) படத்தில், இஸ்லாமியராகத் தோற்றும் அவர் சுற்றுலா வழிகாட்டியாக நடித்திருப்பார். அதில் அவர் கோயில் பூசாரியின் மகளைக் காதலிப்பார். அவரை காப்பாற்றுவதற்காகப் புறப்படும் ஹெலிகாப்டரில் தனது இடத்தை நழுவ விட்டுவிடுவார். இறுதிக் காட்சியில், அவர் பூமியால் விழுங்கப்படுவதற்கு முன்பு, அவருக்கு பிடித்த நடிகர் ஷாருக்கானைப்போலவே, அவரது கைகளை நீட்டிய காட்சியை இப்போது உண்மையான அவரது மரணத்திற்குப் பிறகு பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.
அபிஷேக் சௌபே படமாக்கிய கொள்ளையர்கள் குறித்த 'சோஞ்சிரியா' திரைப்படத்தில் (2019), அவர் நடித்த லக்னா கதாபாத்திரம், தனது பரம எதிரியாக நடித்த அசுதோஷ் ராணாவிடம் வீரமரணம் அடைய ஒரு மரத்தின் பின்னால் தனது மறைவிடத்திலிருந்து வேண்டுமென்றே வெளியேறிவருவார். “படத்தின் லக்னா கதாபாத்திரம் அவரது (சுஷாந்த்) வாழ்க்கை குறித்த மற்றொரு பார்வை கொண்ட அந்தத் தருணம், தற்போது எனக்கு முற்றிலும் மாறுபட்ட பொருளை உணர்த்துகிறது" என்று அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு நேர்காணலில் சௌபே கூறினார்.
சுஷாந்த் கடைசியாக நடித்த 'சிச்சோர்' திரைப்படத்தில், அவரது மகன் நூலிழையில் மரணத்திலிருந்து தப்பிப்பார், இப்போது வைரலாகிவிட்ட அந்தக் காணொலியில் சுஷாந்த், ''ஹமாரா ரிசல்ட் நஹின் டிசைட் கர்த்தா கி தும் லாசர் ஹை கி நஹின், துமாரி கோஷிஷ் டிசைட் கர்த்தி ஹை (நாம் தோல்வியுற்றவரா இல்லையா என்பதை முடிவு தீர்மானிக்காது, நமது முயற்சியே தீர்மானிக்கும்)” என்று ஒரு தந்தையாக மகனிடம் கூறுவார். அந்த வார்த்தையில் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்.