டெல்லி: 'சப்பாக்'படத்துக்காக தனது பங்களிப்பை அளித்திருக்கும் வழக்கறிஞர் அபர்ணா பட்டுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆசிட் வீச்சுக்கு பாதிப்புக்குள்ளான லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'சப்பாக்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் தீபிகா படுகோனே பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்பு கதை தொடர்பாக பங்களிப்பு வழங்கிய தனக்கு அங்கீகாரம் வழங்காததால் ரிலீஸை தடை செய்யக் கோரி வழக்கறிஞர் அபர்ணா பட் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பங்கஜ், 'சப்பாக்' படத்தின் ரிலீஸின்போது படத்துக்காக பங்களிப்பு வழங்கிய மனுதாரருக்கு உரிய அங்கீகாரத்தை படக்குழுவினர்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.