தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இர்ஃபானின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்திய பாலிவுட் நடிகர் - பாலிவுட் செய்திகள்

டி- டே, ஜஸ்பா திரைப்படங்களில் இர்ஃபான் கானுடன் இணைந்து நடித்த நடிகர் சந்தன் நான்கு மாதங்களுக்குப் பிறகு இர்ஃபானின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

இர்ஃபான் கான் சந்தன் ராய் சன்யால்
இர்ஃபான் கான் சந்தன் ராய் சன்யால்

By

Published : Sep 22, 2020, 8:13 AM IST

தனது நண்பரும் சக நடிகருமான மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் நினைவிடத்திற்குச் சென்று நடிகர் சந்தன் ராய் சன்யால் மரியாதை செலுத்தினார்.

கடந்த 2013, 2015ஆம் ஆண்டுகளில் வெளியான டி-டே , ஜஸ்பா படங்களில் சந்தனும் இர்பானும் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் இர்ஃபானின் கல்லறைக்குச் சென்று வணங்கி திரும்பியுள்ள சந்தன், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "நேற்று முதல் எனக்கு இர்ஃபான் ஓயாமல் நினைவில் நிற்கிறார். கடந்த நான்கு மாதங்களாக அவரது கல்லறைக்குச் செல்லாததற்காக என்னை நானே அடித்துக் கொண்டென். தொடர்ந்து இன்று இர்ஃபானின் கல்லறைக்குச் சென்று அவரைப் பார்த்தபோது, மரங்கள், செடிகளுடன் அவர் ஓய்வில் இருந்தார். அவரிடமிருந்து மன அமைதியையும் ஆசிகளையும் பெற்றுத் திரும்பினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நியூரோ எண்டோகிரைன் கட்டியால் பாதிக்கப்பட்டு, அதற்கு எதிராகப் போராடி வந்த நடிகர் இர்ஃபான் கான், கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தனது 54ஆவது வயதில் உடல்நலம் குன்றி உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் படிங்க :மார்பக புற்றுநோயால் அவதிப்படும் நடிகை - மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details