பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சைஃப் அலிகான். இவரது மகளான சாரா அலி கான் தற்போது வளர்ந்துவரும் நடிகையாக உருவெடுத்திருக்கிறார். இந்நிலையில் சாரா அலி கான், கார்த்திக் ஆர்யனுடன் நடித்துள்ள 'லவ் ஆஜ் கல்' என்ற பாலிவுட் படம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது.
இத்திரைப்படத்தில் சாரா அலி கான், ஸோ என்னும் தைரியமிக்க பெண்ணாக நடித்துள்ளார். அதில் அவர், தனது காதலுக்காக ஏங்கும் பெண்ணாகவும் இருப்பினும் அவர் எவ்வாறு தனது வாழ்க்கையையும் வேலையையும் சமாளித்து வெற்றி பெறுகிறார் என்பது போன்ற ஒரு சவால் மிக்க வேடத்தில் நடித்துள்ளார்.
இம்தியாஸ் அலி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரந்தீப் ஹுடா, ஆருஷி சர்மா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.