நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதங்களும் போராட்டங்களும் ஒருபுறம் இருக்க, அதற்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில், திரைப்படங்களும் இதே நேரத்தில் வெளியிடப்பட்டன. குறிப்பாக பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான சல்மான் கானின் தபாங்- 3 திரைப்படமும் வெளியானது. இது குறித்து படத்தின் நடிகையான சோனாக்ஷி சின்ஷா குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது நிலைபாட்டை பகிர்ந்துகொண்டார்.