ஹிந்தியில் ஆதித்ய சோப்ரா தயாரிப்பில், வருண் ஷர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பண்டி அவுர் பப்லி 2'. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மூலம் மீண்டும் சைஃப் அலி கான், ராணி முகர்ஜி இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இவர்களுடன் சித்தாந்த் சதுர்வேதி, ஷர்வாரி வாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிரைம், காமெடியாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2005ஆம் வெளியானது. அப்படம் எதிர்பார்த்ததைவிட ரசிகர்களிடம் அமோக வரவேப்பை பெற்றதால், 'பண்டி அவுர் பப்லி 2' படம் மீது பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.