தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'டவ் தே' புயலால் சேதமடைந்த 'மைதான்'அரங்கு: அழும் மன நிலையில் போனி கபூர் - மைதான் வெளியாகும் தேதி

மும்பை: அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் மைதான் படத்தின் செட் 'டவ் தே' புயலால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகத் தெரியவருகிறது.

Boney Kapoor
Boney Kapoor

By

Published : May 24, 2021, 6:55 PM IST

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மைதான்'. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி வரும் இப்படத்தில், சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இதில், அஜய் தேவ்கனுடன் இணைந்து பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக 'மைதான்' திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், மே 17ஆம் தேதி 'டவ் தே' புயல் காரணமாக மும்பையில் கனமழை பெய்தது. இந்தப் புயல் காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

'டவ் தே' புயல் காரணமாக, மும்பை புறநகர்ப் பகுதியில் 'மைதான்' படத்திற்காகப் போடப்பட்டிருந்த பிரமாண்ட அரங்குகள் பலத்த சேதமடைந்தன. இந்த அரங்கில் வைத்து தான் 'மைதான்' படத்தின் கால்பந்தாட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம், மழை எச்சரிக்கையாலும் 'மைதான்' பட அரங்குகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து இந்தாண்டு தொடக்கத்தில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மீண்டும் அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மே 17ஆம் தேதி 'ட்வ் தே' புயல் காரணமாக அரங்கு பலத்த சேதமடைந்தது.

இதுகுறித்து மைதான் படத் தயாரிப்பாளர் போனி கபூர், "எனக்கு நடந்து கொண்டிருப்பது மிக பயங்கரமானது. அதைப் பற்றி நான் நினைவு கூற விரும்பவில்லை. மன அழுத்தம், நஷ்டம் குறித்து நினைத்துப் பார்த்தால் நான் அழுதுவிடுவேன். பட்ஜெட், செலவுகள் கூடுவதை நினைத்துப்பார்த்தால் எனக்கு மன அழுத்தம் தான் ஏற்படும். புயலால் சேதமடைந்த அரங்கைப் பார்க்க நான் விரும்பவில்லை.

புயலின்போது அரங்கிலிருந்து 40 முதல் 50 ஊழியர்கள் இருந்தனர். இவர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர்ப்பிழைத்துள்ளனர்.

அதை நினைக்கும் போது எனக்கு சற்று நிம்மதியாக உள்ளது. பட அரங்குகள் கிட்டத்தட்ட 80 விழுக்காடு சேதமடைந்துள்ளது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக அரங்கம் பிரித்தபோது அதிலிருந்து பொருட்களை மீண்டும் பயன்படுத்தினோம். ஆனால், தற்போது எதையும் பயன்படுத்த முடியாது" என்றார்.

இதையும் படிங்க: ஈர உடையில் இருந்த அலுவலக ஊழியர்கள்: தனது உடைகளை வழங்கிய பிக்-பி

ABOUT THE AUTHOR

...view details